திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கமலஹாசன் படத்துக்கு நோ சொன்ன சிம்ரன்.! இதுதான் காரணமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் கமலஹாசன். இவர் 80களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் திரை துறையில் தொடர்ந்து நடித்து, தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கமலஹாசனின் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
கமலஹாசன் நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தமிழ் திரை துறையில் இருந்து வருகிறார். இவர் தயாரிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி வெற்றி அடைந்து வருகின்றன. இது போன்ற நிலையில் கமலஹாசனின் கனவு திரைப்படம் என்று சொன்னாலே அது மருதநாயகம் தான் என்று அனைவருக்கும் தெரியும்.
1997 ஆம் வருடம் தொடங்கப்பட்ட மருதநாயகம் திரைப்படத்தை கமலஹாசன் இயக்கி, நடிக்கவிருந்தார். மேலும் இப்படத்தில் பசுபதி, நாசர், விஷ்ணுவர்தன் போன்ற பிரபலங்கள் நடிக்கவிருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இப்படம் பண பற்றாக்குறை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இது போன்ற நிலையில் மருதநாயகம் படப்பிடிப்பின் ஆரம்ப காலகட்டத்தில், நடிகை சிம்ரனிடம் படத்திற்காக முதலீடு செய்ய சொல்லி கமலஹாசன் கேட்டுள்ளார். ஆனால் கமலஹாசன் பலமுறை கேட்டும் சிம்ரன் மறுத்துவிட்டாராம். இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.