பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஸ்வாசம் 100 கோடி வசூலில் பாதி இவருக்கு தான் கொடுக்கணும் - மேடையில் பேசிய பிரபலம்!
இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது விஸ்வாசம் திரைப்படம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்ததால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.
வீரம், வேதாளம் இரண்டும் வெற்றிப்படங்கள் என்றாலும் விவேகம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நான்காவதாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது இந்த படம்.
இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் வரும் கண்ணான கண்ணே படல் தான் என பிரபலம் டி.சிவா மேடையில் கென்னடி க்ளப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் 100 கோடி வசூலில் பாதியை இமானுக்கும் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.