மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் மூன்றே நாளில் விசுவாசம் இத்தனை கோடி வசூலா? தெறிக்கவிடும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்க்ஷன்!
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம், தற்போது விசுவாசம். வீரம், வேதாளம் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் விவேகம் படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதே கூட்டணி நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு விசுவாசம் திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், வசூல் ரீதியாக படம் வசூலை வாரி குவிகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
விஸ்வாசம் படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. முதல் முறையாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் நேற்று ஒரே நாளில் ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும், வரும் வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.