ஒரு விஜய் ரசிகனா, விசுவாசம் படம் பற்றிய உண்மையான கருத்து! படம் எப்படி இருக்கு?



Visuvaasam movie review in tamil

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம், தற்போது விசுவாசம். வீரம், வேதாளம் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் விவேகம் படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதே கூட்டணி நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித குழப்பமும், நம்பிக்கையும் கலந்தே இருந்தது.

visuvaasam

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசுவாசம் திரைப்படம் வெளியாகியது. படம் வெளியான நாளில் இருந்து இன்றுவரை ஒருசிலர் விசுவாசம் படம் சூப்பர் என்றும், ஒருசிலர் விசுவாசம் படம் சுமார் என்று கூறி வருகின்றனர்.

ஆளுக்கு ஒரு கருத்து சொல்ல, படம் எப்படித்தான் இருக்குனு உங்களுக்கு குழப்பமா இருக்கா? ஒரு விஜய் ரசிகனா, அஜித்தின் விசுவாசம் படம் பற்றிய உண்மையான கருத்து இது. இத படுச்சுட்டு படம் பாக்குறதா, இல்லையானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

படத்தின் முதல் பாதி கொஞ்சம் சுமார்தான். படத்தின் நாயகி நயன்தாராவுடன் முதல் பாகத்தில் அஜித் செய்யும் காதல் ரொமான்ஸ், அது சார்ந்த நகைச்சுவைகள், தேவை இல்லாத காட்சிகள் இவற்றை பார்க்கும் போது அஜித்துக்கு இதெல்லாம் தேவையான்னுதான் தோணும்.

ஆனால், படத்தின் இரண்டாம் பாதி பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளார் நடிகர் அஜித். சும்மா பந்தா காற்றது, காத்துல பறந்து பறந்து அடிக்கிறது, தேவை இல்லாம பஞ் வசனங்கள் பேசுவது இதெல்லாம் இல்லாமல், ஒரு மகளின் பாசத்திற்கு ஏங்கும் சாதாரண தந்தையாக தனது நடிப்பில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார் நடிகர் அஜித்.

visuvaasam

படத்துல வில்லன் அப்டினா நாலு பேர அடிக்கணும், நாலு கொலை பண்ணனும் அப்படின்றத தாண்டி, வில்லனும் சாதாரண மனுஷன்தான் என அருமையா காண்பித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் சிவா. தலனா, பில்லா மாதிரி மாசா இருக்கனும், மங்காத்தா மாதிரி கிளாஸா இருக்கணும்னு நெனச்சு போனீங்கன்னா கண்டிப்பா நீங்க ஏமாந்து போவீங்க.

குடும்பத்தோட ஒரு படத்துக்கு போனோமா, 3 மணி நேரம் ஒரு நல்ல படம் பாத்தோமா, சென்டிமெண்டா பீல் பண்ணுனோமா அப்டினு நெனச்சு போனீங்கன்னா உண்மைலயே விசுவாசம் படம் செம சூப்பர்.