மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வாசம்! கண்கலங்கும் ரசிகர்கள்! அஜித் வேற லெவல்!
இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம். பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் என ஏற்கனவே மூன்று படங்களை கொடுத்த இந்த கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளது.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா, பேபி அணிக்கா என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படமும், தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானதால் இருதரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஸ்வாசம் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுவரை விசுவாசம் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆபாச காட்சிகள், பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள், பஞ் வசனங்கள் என எதுவம் இன்றி ஒரு தரமான குடும்ப படமாக உள்ளது விஸ்வாசம் திரைப்படம். அதேபோல செண்டிமெண்ட் நடிப்பில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார் அஜித். படம் பார்க்கும் ஏராளமானோர் கண் கலங்குவதை பார்க்க முடிந்தது. மேலும் பல திரையரங்கங்களில் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படம் பார்க்க குவிந்து வருகின்றனர்.