மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விசுவாசம் படத்திற்கு இப்படி ஒரு பெருமையா? அஜித் சினிமா வாழ்க்கையில் இதுதான் முதன் முறை!
இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம என மூன்று படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து விசுவாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேபோல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டு படங்களும் நாளை அதாவது ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது.
தல, தலைவர் ரசிகர்கள் இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித்தை பெருமை படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முறையாக பெண்களுக்கு மட்டும் விஸ்வாசம் ஸ்பெஷல் ஷோ திரையிடுகிறார்கள் என்ற தகவல்கள் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. இப்போது, அந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பெண்கள் சிறப்பு காட்சி ஹவுஸ் ஃபுல் ஆகியிருகின்றது.
தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் தனி ஷோ காணிப்பது இதுதான் முதல் முறை. ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ஒரு படத்திற்க்கு மட்டும் கேரளாவில் இதுபோன்று பெண்களுக்கு தனி ஷோ காண்பித்தது குறிப்பிடத்தக்கது.
Viswasam Ladies Special show at Vela cinemas: https://t.co/gNIuC9wX9z via @YouTube
— velacinema (@velacinemas) December 28, 2018