96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புது புது சாதனை படைக்கும் விசுவாசம்! தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களுக்கு பிறகு தற்போது விசுவாசம் என்ற படத்தில் நடித்துள்ளார். வீரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் வேதாளம், விவேகம் இரண்டும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் விசுவாசம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகம் எழுந்துள்ளது. வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தூக்கு துறை என்ற பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல நேற்று மாலை வேட்டி கட்டு என்ற பாடல் வரிகள் வெளியாகி தல ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் வேட்டி கட்டு பாடல் YouTube இல் 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.