#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்ட பிரபல தொகுப்பாளினி பிரியங்கா... வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மேலும் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கலகலப்பாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
பிரியங்கா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 5 யிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் தற்போது கன்னடாவில் ரோட்டில் செம குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.