மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த நடிகை சித்ராவுக்கு இப்படி ஒரு ரசிகையா.! என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்.!
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் முன்னேறி பின்னர் சில சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏரளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.
இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் அதற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்ராவின் ரசிகை ஒருவர் சித்ரா கையில் போட்டப்பட்டிருந்த டாட்டூ போலவே தனது கையிலும் டாட்டூ வரைந்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.