மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயவுசெய்து இப்படி விளம்பரப்படுத்தாதீங்க ப்ளீஸ்!! வேண்டுகோள் விடுத்து நடிகர் யோகிபாபு வெளியிட்ட ஷாக் வீடியோ! எதனால் தெரியுமா?
இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. இவர் தற்போது நகைச்சுவை காதாபாத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் யோகிபாபுவின் வளர்ச்சி மற்றும் புகழ் ஆகியவற்றை கொண்டு அவர் நடித்த பல பழைய படங்களையெல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் யோகிபாபுவின் புகைப்படத்துடன் தெளலத் என்ற படத்திற்கான விளம்பரம் வெளியாகி வைரலானது. இதனை கண்ட யோகி பாபு இந்த படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். pic.twitter.com/PpxpcLscrY
— Yogi Babu (@iYogiBabu) August 14, 2020
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில காட்சிகளில் மட்டும் நான் நடித்த படங்களை என்னை முதன்மையாக கொண்டு விளம்பரப்படுத்துகின்றனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்கள் என பலரும் ஏமாற்றம் அடைகின்றனர். இனிமேல் நான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காத படங்களின் விளம்பர போஸ்டர்களில், என்னை ஹீரோ போல விளம்பரப்படுத்த வேண்டாம் என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.