கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
TTF வாசனால் கதறிய விஜய் டிவி நடிகை.! வைரல் வீடீயோவால் அதிர்ச்சி.!
TTF வாசன் என்பவர் பைக் ரைடிங் செய்து ஊர் சுற்றி அதனை வீடியோவாக போடும் பிரபல யூ டியூபர் ஆவார். இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. பல 2k கிட்ஸ் இவரை பாலோ செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ஜி.பி முத்துவை வைத்து வேகமாக பைக் ஓட்டி சென்ற வீடியோ இணையத்தில் பரவி போலீசார் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் வரை சென்ற போதிலும், அங்கிருந்தும் வீடியோ பதிவு செய்து ஹீரோயிசம் காட்டி வந்தார் டிடிஎஃப்.
அதன் பின், ஃபேன் மீட் என்று வைத்து ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடி இவரை பார்க்க வந்தனர். கூட்டம் அதிகமான காரணத்தினால் போலீசார் வந்து கூட்டத்தை கலைத்து வாசனை அங்கிருந்து கிளம்பச் செய்தனர். அங்கிருந்து கிளம்பிய டிடிஎஃப் வாசன் தன் ரசிகர்கள் மீது கை வைத்த போலீசை அவர்களுக்கு ராஜ மரியாதை தரவைப்பேன் என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தான் கடைக்கு சென்று கட்டப்பை வாங்கி வருவதை போல போகும் இடமெல்லாம் கேஸ் வாங்கி வருகிறேன் என்று நக்கலாக அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், விஜய் டிவி மௌன ராகம் ரவீணா டி டி எஃப் வாசனுடன் பைக்கில் சென்ற நிலையில், அதை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் பைக்கில் வேகமாக சென்ற பொழுது ரவீணா அலறியடிக்கிறார். அப்போது டிடிஎப் வாசன் "அவ்ளோ வேகமா போகலைங்க கத்தி கேஸ் வாங்கி கொடுத்துடாதீங்க" என்று சமாதானம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டெங்கில் இடம்பிடித்துள்ளது.