மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலிமினேட் ஆகி வெளியேறிய நடிகர் யுகேந்திரன்.! ரசிகர்களுக்காக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வித்தியாசமான டாஸ்க்குகளால் ஒவ்வொரு நாளும் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தானாக வீட்டை விட்டு வெளியேறினார். பின் மூன்றாவது வாரம் விஜய் வர்மா மற்றும் கடந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷா மற்றும் நடிகரும், மலேசியா வாசுதேவனின் மகனுமான யுகேந்திரன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினர்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய யுகேந்திரன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது யுகேந்திரன் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ரசிகர்களுக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.