நடிகர் விஜயின் அரசியல் நகர்வு குறித்து யுவன் சங்கர் ராஜாவின் வேற லெவல் பதில்..



yuvan-sanker-raja-told-about-acter-vijays-political-sta

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து 90 வயது முதல் தற்போது வரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது

Yuvan

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் 'லியோ' திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற நிலையில், இளைய தளபதி விஜய் சமீபத்தில் 10 மற்றும் 12 வது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விழா அமைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்காக பலவிதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

Yuvan

இதன்படி இளைய தளபதி அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து வருகிறது. இதனை பத்திரிகையாளர்கள் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்டனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா, விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான் என்று கூறியிருக்கிறார்.