96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனுஷன் வேற லெவல்.. ரசிகரின் புகைப்பழக்கத்தை விட வைக்க இசையமைப்பாளர் யுவன் செய்த காரியம்! என்ன தெரியுமா?
சினிமா துறையில் முன்னணி இயக்குனராக இருக்கக்கூடியவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் சில தினங்களுக்கு முன் தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைப்பாளராக பணியாற்றிய மாமனிதன் படத்தில் இடம்பெற்ற ஏ ராசா என்ற பாடலை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு சர்வதேச அளவில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பிரபலங்கள், சுற்றுபுற ஆர்வலர்கள் பலரும் புகைப்பிடித்தலை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில், நீங்கள் புகைப்பிடிப்பதால் உங்கள் உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமில்லாமல் உங்களை சூழ்ந்திருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பதிவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், நீங்க ஹாய் சொன்னா நான் புகைப்பிடிப்பதை விட்டுவிடுகிறேன் என கூறியுள்ளார். உடனே இசையமைப்பாளர் யுவன் ஹாய் என கூறி புகைப்பிடிப்பதை விடுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தைப் பெற்று, அவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.