கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
பனைமரத்திற்கு இவ்வளவு வல்லமையா? நாம் அறிந்திராத பனையின் பல்வேறு பயன்கள்;
பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழக அரசின் சின்னமாகவும் பனை மரம் விளங்கி வருகிறது.
மனிதனுக்கு இயற்கை அளித்த அற்புத வரம் பனைமரம் . இவற்றின் பயன்களும் மருத்துவ குணங்களும், எண்ணில் அடக்க முடியாது.
நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பயன்பெற முடியும்.
நுங்கில் உள்ள நீர் சத்தானது, வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இவ்விரண்டிற்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் கிடைக்கும், அதே பதநீரில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால், கொஞ்சம் போதை தரும், இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.
மரங்களில் பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என்று இரண்டு வகை உண்டு. பெண் பனையில் இருந்துதான் குறும்பைகள் காய்க்கும். அது நன்கு முற்றினால் பனம் பழம். பழுக்காமல் இருந்தால் பனங்காய் என்றும், சிறிய அளவில் குறும்பலாக இருக்கும்போது நுங்கு கிடைக்கும். அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்தும் உண்ணலாம்.
அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
தொடர்ந்து பதனீரை 40 நாட்கள் குடித்து வந்தால் மேக நோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். உடல் வீக்கம், வயிற்றுக்கோளாறு, வெள்ளைப்படு, வெட்டை நோய்களை குணமாக்கவும், சிறுநீர் வெளியேற்றவும் பதனீர் நமக்கு உதவுகிறது.
பன கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது.
பனம் பூவை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி மருந்தாக பயன்படுத்தலாம். இதன்மூலம் சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது.
உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சலும், பித்தக்கோளாறுகளுக்கும் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தையும் குணப்படுத்தவும் பனை பூந்தண்டு சாம்பலை மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இப்படிப்பட்ட மருத்துவ குணம்கொண்ட பனை மரங்களை வளர்க்க பொதுமக்களும், அரசும் முன்வர வேண்டும்.