பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
இந்த மூன்று பழங்கள் போதும்; உங்கள் தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும்
![3 fruits for a healthy body](https://cdn.tamilspark.com/large/large_sl526701-14043.jpg)
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள் சேர்த்து தினமும் சாப்பிட வேண்டும். கோடை காலங்களில் இளநீர், கரும்புச்சாறு பருகும் பழக்கத்தை கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாதுளை, கொய்யா, சப்போட்டா போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் சார்ந்த பிரச்சனைகள் பலவற்றைத் தவிர்க்க முடியும். அதுவும் முக்கியமாக மாதுளை மிகவும் சத்துள்ள பழமாகும்.
மாதுளை:
மாதுளையின் ஐந்து முக்கியமான பயன்களைப் பார்க்கலாம்: மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன. இனிப்பான மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.
மாதுளை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியமும் புத்துணர்வும் அளிப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளை தான்.
சர்க்கரை, இதயநோய், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, யாராக இருந்தாலும் மாதுளம்பழத்தை உண்ணலாம். இதனால் மலச்சிக்கல் குறையும். சிறுநீரகம் பிரச்சனைகள் தீரும். ஈரல், வயிற்றுப்புண், குடல்புண் மற்றும் அல்சரேட்டிவ் டெர்மடைட்டிஸ் (ulcerative dermatitis) எனும் தோல் நோய் தீர உதவும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
கொய்யா:
கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. கொய்யாவில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் மினரல்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளன. கொய்யா ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி தரும். சர்க்கரை வியாதி கொய்யா பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கட்டுப்படும்.
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாகச் சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரணக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்தும்.
சப்போட்டா:
சப்போட்டா கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். உடல் உஷ்ணத்தைத் தணித்து தாகத்தை நன்று தணிக்கும் தன்மை உடையது. கொழுப்புச் சத்து அதிகம் இருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். இரவு தூக்கம் வராதவர்கள் தினமும் ஒரு தம்ளர் சப்போட்டா ஜூஸ் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் சப்போட்டா பழம் மிகவும் நல்லது. சப்போட்டா பழத்தை அடிக்கடி வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் வராது. சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலைப் பளபளப்பாக வைக்கும்.