96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#HealthTips: மார்பக புற்றுநோயை விரட்ட வேண்டுமா?.. 30 வயதுடைய பெண்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்..!
தற்சமயம் பழங்களை யாரும் அதிகம் சாப்பிடுவதை விரும்புவதில்லை. அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. பெண்கள் ஆண்களைப் போல் வேலைக்கு செல்வதால், காலை வீட்டு வேலையை முடித்துவிட்டு வேலைக்கு செல்லவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் பழங்களையும் சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. இதனால் பெண்கள் நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். பிரச்சனை முற்றியதும் மருத்துவமனை, மாத்திரை, ஊசி என அவர்களின் அன்றாட வாழ்வில் சிக்கல்களை உண்டாக்குகின்றது.
இதனைத்தவிர்க்க நாம் தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி நம்முடைய உடலை நாமே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்று நோயை எதிர்க்கும் சக்தி கருப்பு திராட்சையில் உள்ளது. அதுவும் விதை உள்ள கருப்பு திராட்சை தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த திராட்சையை தினமும் அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸ் போன்று போட்டு குடித்தாலும் உடலுக்கு நல்லது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே உடல் உஷ்ணம், கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம், இதயம் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.