மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைக்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுப்பவரா நீங்கள்?.. உங்களுக்கான ஆலோசனை இதோ.!
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது. சில சமயத்தில் தாய்ப்பால் அளவு குறைவு அல்லது பிற காரணங்களால் பாட்டில் மூலமாக பால் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிறந்த குழந்தைகளுக்கு பாட்டில் பால் என்பது தீங்கு விளைவிக்கும் எனினும், இயலாத சூழ்நிலையில் அதனை பயன்படுத்த மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது.
பாட்டிலில் பால் கொடுக்கும் போது சுகாதாரத்தில் கட்டாயம் தனிச்சிறப்பு கவனிப்பு செலுத்த வேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களை நோய் எளிதில் தாக்கம் என்பதால், பாட்டில் பால் கொடுக்கும் போது பாட்டிலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பாட்டிலை சூடான நீர் வைத்து சுத்தம் செய்த பின்னரே அதனை உபயோகம் செய்ய வேண்டும். முடிந்தளவு பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் இருப்பது நல்லது.
குழந்தைகளை மடியில் வைத்து ஒரு கையினை குழந்தைகளின் தலையில் வைத்து பால் கொடுப்பது நல்லது. பலரும் குழந்தைகளை படுக்க வைத்து பீடிங் பாட்டிலில் பால் கொடுப்பார்கள். அது குழந்தையின் தொண்டைக்குள் பால் நிரம்ப வழிய செய்யும். இதனால் சில நேரம் மூக்கு வழியாக பால் வரும்.
இவ்வாறு தொடர்ந்து நடந்தால் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படலாம். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும்.