அனைத்து வயதினருக்கும் நன்மைகளை வாரிவழங்கும் இளநீர்.. மிஸ் பண்ணாதீங்க.!



benefits for summer problems

குறைந்த விலையில் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு இருப்பது தான் இளநீர். மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் பலருக்கும் முழு பலனையும் கொடுக்கக்கூடியது இளநீர் தான். கோடை காலத்தில் வெப்பம் சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்து நம்மை காக்க இளநீர் பெரிதளவில் உதவுகிறது. 

அத்துடன் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது சிறந்த ஊட்டச்சத்து பானமாகும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் முதியோர்களுக்கு உடல் சோர்வு இல்லாமல் இருக்க இது உதவுகிறது.

benefits

இளநீரில் குறைந்த அளவு தான் கொழுப்புகள் இருக்கின்றன. எனவே, இதை அன்றாடம் நாம் சாப்பிடும் போது உடல் எடை குறைய உதவுகிறது. மேலும், தேங்காய் சாப்பிட்டால் வயிற்று புண் பிரச்சனைகள் தீரும். ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இளநீர் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படும். 

நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்க இளநீர் உதவுகிறது. நீரை விட பல மடங்கு சக்தியை கொண்டிருக்கும் இளநீரை அருந்துவதால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.