நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நாவல் பழத்தின் நன்மைகள்.!



Benefits of naval fruit

கிராமப்புற காடுகளில் எளிதாக கிடைக்கும் நாவல் பழம் பல்வேறு சத்துக்களையும், மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த பழம் துவர்ப்பு சுவையுடன் காணப்பட்டாலும் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

அதன்படி உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் நாவல் பழத்தின் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

Naval fruit

நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கங்கள் குறைந்து முகம் அழகாக மாறும். நாவல் பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

நாவல் பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலுக்கு தேவையான நோய்ப்பு சக்தியை அள்ளி கொடுக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்துகிறது.

Naval fruit

நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரி செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நாவல் பழத்தில் செய்யப்பட்ட வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.