மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... மஞ்சள் பால் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா.?
மஞ்சள் இயற்கை வழங்கிய அருட்கொடைகளில் முக்கியமானதாகும். இவற்றில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் இருப்பதோடு இதன் நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மஞ்சளை சிறந்த ஆயுர்வேத மருந்தாக நிலை நிறுத்துகிறது. நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் அடிக்கடி மஞ்சள் கலந்த பால் குடிக்க வற்புறுத்துவார்கள். இவற்றில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளின் மருத்துவ குணங்கள்
மஞ்சள் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல பொருட்கள் அடங்கியிருக்கிறது. மஞ்சள் ஒரு சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பு பொருளாகும். இவற்றில் இருக்கக்கூடிய குர்குமின், ஜிங்கிபெரீன், செஸ்கிடெர்பைன்கள் போன்றவை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இவை உடலை நுண்ணுயிர்களின் தொற்றில் இருந்து காப்பதோடு காயங்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
பாலில் இருக்கும் சத்துக்கள்
பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய ஒரு உணவுப் பொருளாகும். பாலில் அதிக அளவிலான கால்சியம் புரதம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்து இருக்கின்றன. இவை நம் உடலின் எலும்புகளை வலுப்படுத்துவதோடு உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
இதையும் படிங்க: பெண்களே உஷார்.!! மார்பக புற்றுநோய் அச்சமா.? வீட்டிலிருந்தே இந்த பரிசோதனைகளை செய்து பாருங்கள்.!!
மஞ்சள் பாலின் நன்மைகள்
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு உறங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் கலந்து அருந்தி வந்தால் தூக்கம் நன்றாக வரும். மேலும் மஞ்சள் பால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கிறது. தினமும் இரவில் மஞ்சள் பால் குடித்து வர சளி தொல்லை காய்ச்சல் போன்றவை உடலை தாக்காமல் பாதுகாக்கிறது. மஞ்சள் சரும ஆரோக்கியத்தில் பண்டைய காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய கிருமிநாசினி பண்புகள் சருமத்தில் இருக்கும் கிருமி தொற்றுக்களை நீக்கி சருமம் பொலிவுடன் இருக்க உதவுகிறது. பாலில் இருக்கக்கூடிய சத்துக்கள் சருமத்தை பளபளப்புடன் வைக்கின்றன. எனவே மஞ்சள் பாலை தினமும் குடித்து வர சருமம் பொலிவு பெறும். மேலும் மஞ்சள் பால் குடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: ஷாக்கிங்... இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா.? உங்கள் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.!!