கொழுப்பு கூடுவதே தெரியாமல் வைக்கும் ஆப்பு.. எப்படி சரி செய்வது.?!



foods-to-eat-to-reduce-bad-cholesterol

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு காரணம் உணவு முறை தான். "உணவே மருந்து! மருந்தே உணவு!" என இயற்கை மூலிகைகளை உணவாக எடுத்துக்கொண்ட காலத்தில் எந்த உடல் சார்ந்த பிரச்சனையும் வரவில்லை. இப்போது நாம் உடற்பயிற்சி செய்ய தனியாக நேரம் செலவிடுகிறோம். அப்போது விவசாயம் செய்வதே கடுமையான உடற்பயிற்சி தான். மூன்று வேளையும் நேரம் தவறாமல் சாப்பிடுவது நல்லது. இன்றைய பதிவில் கெட்ட கொலஸ்ட்ராலை எப்படி அழிப்பது என்று பார்ப்போம்.

கெட்ட கொலஸ்ட்ராலை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகள் :

அன்றாட உணவில் கீரை வகைகள் மற்றும் மூன்று விதமான பழ வகைகளை உண்ணுவது நல்லது. மேலும், கிரீன் டீ குடிக்கலாம். முழு தானிய வகைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: குளிருக்கு பயந்து இப்படி மட்டும் தூங்காதீர்கள்..! பெரும் ஆபத்தை சந்திக்கலாம்.!

முருங்கை கீரை வாரத்தில் 3 நாட்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் கொழுப்பை கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், கொண்டை கடலை, தட்டை பயறு, பாதம் பருப்பு என ஒவ்வொரு நாளும் ஒரு வகையான தானிய வகையை உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம். மேலும், கொழுப்பை குறைக்க ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. மாதத்திற்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்வது நல்லது.

Bad cholesterol

கொலஸ்ராலை அதிக படுத்தும் உணவுகள் :

எண்ணெயில் பொறித்த உணவு வகைகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். குறிப்பாக அசைவ உணவான கோழி இறைச்சி எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் கொழுப்பை அதிக படுத்தி உடலை பருமனாக மாற்றி விடும். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் பால் பொருட்களை தவிர்த்தல் நல்லது. மேலும், இனிப்பு வகைகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது.

நம் இரத்தத்தில் கொழுப்பு கூடுவது நமக்கு உடனே தெரியாது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது தான் சில உடல் பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படுத்தும். மேலும், இதயத்தை பாதித்து இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும். ஆகையால் முடிந்தவரை வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவரா நீங்கள்.?! உஷார்.. இது உங்களுக்கு தான்.!