நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
சர்க்கரை நோய் குறைய இரவில் 2 நிமிடம் ஒதுக்கினாலே போதும்.. அட்டகாசமான தகவல்..! செய்யவேண்டியது இதுதான்..!!
இந்தியாவில் வாழ்ந்து வரும் மக்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோய்பாதிப்பு எண்ணிக்கை 2045-ல் 13 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்களின் வாழ்நாள் முழுவதும் மாத்திரை, மருந்துடன் அலைய வேண்டும்.
சர்க்கரை அளவு அவர்களின் உணவு பழக்கவழக்கத்தால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தினம் இரவு சாப்பிட்ட பின்னர் 2 நிமிடம் நடந்தாலே சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் சாப்பிட்டதும் உடனடியாக உறங்க செல்வது இரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவை அதிகரிக்கும். இதனால் சாப்பிட்டு 2 நிமிடம் லேசாக நடந்து கொடுக்க வேண்டாம்.
2 ம் கட்ட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் 5 நிமிடம் வரை இரவு சாப்பிட்டதும் நடந்து கொடுக்கலாம். கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை குறைவாக சாப்பிடுவது, மருந்துகளை முன்கூட்டியே சாப்பிடுதல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவை சர்க்கரை நோயை குறைக்க வழிவகை செய்யும்.
இரவு வேளையில் சாப்பிட்ட பின்னர் நடந்து கொடுப்பதால் தசை மற்றும் செல்கள் செயல்படுகின்றன. உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தசை, செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இரவில் சாப்பிட்டதும் உறங்க செல்வது கொழுப்பை அதிகரிக்க வழிவகை செய்யும். இதனால் கல்லீரலில் கொழுப்பு தாங்கும். இதில், இதயநோய் இருக்கும் நபர்கள் சாப்பிட்டதும் உறங்க கூடாது.