பீட்ரூட் தானேன்னு அலட்சியமா நினைக்காதீங்க: இதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..!



iron content in beetroot helps in the formation of new blood cells in our body

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.


உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை பீட்ரூட் சாப்பிடுவதால் குணமாகிறது. உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் சுறுசுறுப்பின்றி  காணப்படுவது இவையாவும் ரத்தசோகையால் ஏற்படுவது நாம் பீட்ரூட்டை அன்றாடம் எடுத்துக்கொள்ளும் போது இரத்தசோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.

பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள், சுவையும் கூடும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த அருமருந்து. பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த அருமருந்து. பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.