கருத்தடை முறைகள் என்னென்ன தெரியுமா?.. கருத்தடை செய்வது நன்மையா?.! தெரிஞ்சிக்கலாம் வாங்க..!!
கருத்தடை முறைகள் மற்றும் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக எப்படி கருத்தடை செய்வது? கருத்தடை முறை நல்லதா? என்று இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.
கருத்தடை முறைகளை தன்னிச்சியுடன் பயன்படுத்தி கருப்பையில் கரு பதித்தலையோ அல்லது கருவுறுதலையோ தடுத்தல்தான் குடும்ப கட்டுப்பாடு. இது தற்காலிகமாக கருத்தடை செய்வது மற்றும் நிரந்தரமாக கருத்தடை செய்வது என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக கருத்தடை முறையில் இயற்கையாக மற்றும் வேதிப்பொருள் பயன்பாடு கருவிகள், ஹார்மோன் தடுப்பு முறை போன்ற முறைகளில் செய்யலாம்.
இயற்கை கருத்தடை முறை :
இயற்கை கருத்தடை முறையில் விந்து செல் மற்றும் அந்த செல் சந்திப்பது தடுக்கப்படுகிறது. இதில் சீரியக்க முறை, விலகல் முறை, பாலுணர்வு தொடர் தளர்ப்பு முறை மற்றும் பாலூட்டும் கால மாதவிடாய்மை அடங்கும். ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் இயற்கையான முறையில் தங்கள் சம்மதத்துடன் பிரிந்து இருப்பதாகும்.
சீரியக்க முறை :
மாதவிடாய் சுழற்சிக்கு பின் 14 ஆம் நாள் அண்ட செல் வெளியேறும். வெளியேறிய அண்ட செல் 72 மணி நேரம் அதாவது இரண்டு நாட்கள் பெண்ணின் இனப்பாதையில் உயிருடன் இருக்கும். அப்போது விந்து செல்லானது, அண்ட செல்லை சந்திக்காமல் இருப்பதே சீரற்ற முறையில் கருத்தடை என்று கூறப்படுகிறது.
பாலுணர்வு தொடர் தளர்ப்பு முறை :
பாலுணர்வு தொடர் தளர்ப்பு முறை என்பது கலவியை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது ஆகும். இதன் மூலம் கருத்தரித்தல் தடுக்கப்படுகிறது.
விலகல் முறை கருத்தடை :
விலகல் முறை கருத்தடையில் விந்தணுக்கள் கலவிகால்வாயை சென்றடையாதபடி, ஆண்கள் தனது விந்து திரவத்தை வெளியேற்றுவதற்கு முன்னரே விளகிக்கொள்வர்.
பெண்களின் கால மாதவிடாயின்மை :
தாய் பாலூட்டும் சுழற்சி மீண்டும் தொடங்க கிட்டத்தட்ட 6 மாதகாலமாவது ஆகலாம். இந்த நிலைக்கு பாலூட்டும் கால மாதவிடாயின்மை என்று பெயரிடப்பட்டுள்ளது.
வேதிப்பொருள் பயன்பாட்டு முறை :
வேதிப்பொருள் பயன்பாட்டு முறையில் ஜெல்லி, நுரைக்கும் மாத்திரைகள் மற்றும் களிம்பு போன்றவை கலவிக்கால்வாயில் விந்தணுக்களை முழுமையாக செயலிழக்கசெய்து கருவுறுதலை தடுக்கிறது.
கருவிகள் பயன்பாட்டு முறை :
இந்த முறையில் மருத்துவ நிபுணர்களின் மூலமாக பெண்களின் கலவிக்கால்வாயின் மூலம் கருப்பையினுள் ஒரு கருவி பொருத்தப்படும்.
ஹார்மோன் தடுப்பு முறை :
இந்த முறையில் ஹார்மோன்கள் அண்டகத்திலிருந்து, அண்டசெல் விடுபடுவதை தடுப்பதோடு கருப்பைவாய் திரவத்தை கெட்டியாக்கிவிடும். இதனால் விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவது தடுக்கப்படுகிறது.
நிரந்தர கருத்தடை முறை :
நிரந்தர கருத்தடை முறையை நிரந்தரமாக குழந்தைகள் வேண்டாம் என்று கருதும் தம்பதிகள் பயன்படுத்துவர்.
கருக்குழல் தடை :
இந்த முறையில் பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய வெட்டின் மூலமாக அண்டநாளம் வெட்டப்படுகிறது. பின்னர் இரண்டு வெட்டுமுனைகளும் இணைந்து முடிச்சிடப்படுகிறது.
அறுவை சிகிச்சை முறை :
தற்போதைய காலகட்டத்தில் கருத்தரிப்பதை விரும்பாத ஆண்கள் பெண்களுக்கு அறிவுறுத்துவது தான் நிரந்தர கருத்தடை முறை. இந்த அறுவை சிகிச்சையின் மூலமாக இனசெல்களின் இயக்கம் முழுமையாக தடுக்கப்படுகிறது.
விந்து குழல் தடை :
விந்து குழல் தடையின் மூலமாக ஆண்களின் விந்துப்பையில் ஏற்படுத்தப்படும் ஒரு சிறுதுளையின் மூலமாக இருவிந்து நாளமும் வெட்டப்பட்டு முடிச்சிடப்படுகிறது. இதன் காரணமாக விந்தணுக்கள் நுழைவது தடுக்கப்படுகிறது.
கருத்தடை செய்வது நல்லதா?
கருத்தடை செய்வது தம்பதிகளுக்கு நல்லது என தோன்றினாலும் மருத்துவர்கள் அதை தவறு எனக் கூறுகின்றனர். கருத்தடை செய்வதால் இப்போது பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், வயதாகும் காலங்களில் முதுகுவலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் கருத்தடை செய்யாமல் இருப்பதே நல்லதாகும். இதைத்தான் மருத்துவர்களும் பரிந்துரைத்துள்ளனர்.