பெண்களே உஷார்.!! மார்பக புற்றுநோய் அச்சமா.? வீட்டிலிருந்தே இந்த பரிசோதனைகளை செய்து பாருங்கள்.!!



self-assessment-test-for-breast-cancer

இன்று உலக அளவில் மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது புற்று நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் பெண்களை அச்சுறுத்தும் ஒரு நோயாக உருவெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை வீட்டில் இருந்தே பரிசோதிக்க சில எளிமையான முறைகளை மருத்துவர்கள் விளக்குகின்றனர். அவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்

உங்கள் மார்பகங்களை பரிசோதனை செய்வதற்கு சரியான நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிந்து சில நாட்களுக்குப் பிறகு மார்பக பரிசோதனை செய்வது உகந்ததாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அந்த நேரங்களில் தான் ஹார்மோன்களில் மாற்றங்கள் இருக்கும். எனவே மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு மார்பகத்தை பரிசோதனை செய்வதற்கான நேரத்தை தேர்வு செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

health tips

மார்பகங்களை பரிசோதனை செய்தல்

கண்ணாடியின் முன் நின்று இரண்டு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மார்பகங்களின் அளவு வடிவம் மற்றும் தோல் போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை கூர்மையாக கவனிக்க வேண்டும். மேலும் கைகளை உயர்த்தியும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏதும் தென்படுகிறதா.? என கண்காணிக்க வேண்டும். மார்பகங்களை பரிசோதனை செய்வதோடு அக்குள் பகுதியையும் பரிசோதனை செய்ய வேண்டும். அவற்றில் ஏதேனும் கட்டி அல்லது தடித்து இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஹீமோகுளோபின் குறைகிறதா.? கவலை வேண்டாம்.!! இதோ சூப்பரான ஹோம் ரெமிடி.!!

மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல்

உங்கள் மார்பகங்களில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் இருப்பதாக உணர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவருக்கும் சந்தேகம் இருந்தால் ஸ்கேன் மற்றும் மேமோகிராம் பரிசோதனைகள் செய்து ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டறிந்து கூறுவார்கள். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதையும் படிங்க: பல் வலி பாடாய்ப்படுத்துகிறதா.? எளிதில் நிவாரணம் பெற சில டிப்ஸ்.!!