3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அச்சச்சோ.. பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வாய்ப்பு.. உஷார்.!
மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பாதிப்பு கிடையாது. சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு ஆண்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மார்பகப்புற்றுநோயின் அறிகுறிகள் தொடக்கத்தில் ஏதும் தெரியாது என்றாலும், போதிய விழிப்புணர்வு இல்லாதததும் அதனை கண்டறிவதற்கு வாய்ப்பில்லாமல் சென்றுவிடுகிறது.
மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் பொதுவான அறிகுறியாக இருக்கிறது. மார்பக சருமத்திற்கு அடியில் இருக்கும் திசுக்களின் அமைப்புகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக மார்பகத்தில் கட்டிகள் ஏற்படும். இது வலியில்லாமல் இருப்பதால், ஆண்கள் அதனை கண்டுகொள்வதில்லை. இதனைப்போன்ற பிற அறிகுறியும் மார்பக புற்றுநோயை உணர்த்துகிறது.
1. மார்பக காம்பு பகுதி உள்நோக்கு சுருக்கிக்கொண்டு செல்வது பொதுவானது. இது திசுக்களின் வளர்ச்சியால் நடக்கிறது. மார்பக காம்பு பகுதி சிவப்பது, வீங்குவது, சரும செல்கள் சேதமாவது, கட்டியாக இருப்பது, தடுப்பது போன்றவை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அறிகுறி ஏற்படும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளலாம்.
2. சில நேரத்தில் மார்பக காம்பில் இரத்த கட்டிகள் ஏற்படலாம். காம்புகளில் இருந்து இரத்தம் போன்ற திரவம் வெளியேறும். இதுவும் மார்பக புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது.
3. மார்பக காம்புகளை சுற்றிலும் புண், சொறி போன்ற பிரச்சனை ஏற்படுவது பொதுவானது என்றாலும், அதே சமயத்தில் மார்பக காம்பை சுற்றியுள்ள சரும பகுதியில் ஏற்படும் வீக்கம், சுருக்கம் போன்றவற்றை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.
4. கைகளில் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் பகுதியில் ஏற்படும் வீக்கம், மார்பு காம்பு பகுதியில் ஏற்படும் புண் மற்றும் வலி, எரிச்சல் போன்றவையும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
பெண்களை போலவே ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. வயதானவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதே வேளையில், எவ்வயதிலும் உடல் பருமன் மற்றும் பிற பிரச்சனை காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படும்.
உடலின் உயரத்திற்கு ஏற்ப எடையினை பராமரிப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது மூலமாக மார்பக புற்றுநோய் அபாயம் குறையும். மரபணு காரணமாக ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு இருக்கிறது என்றாலும், சோதனை செய்துகொள்வது நல்லது. மதுபான பழக்கம், புகைப்பழக்கம் போன்றவையும் இதன் காரணியாக அமைகிறது.