மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலையில் பூரி சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளீர்களா?.. எச்சரிக்கை விடும் மருத்துவர்கள்.. காரணம் இதுதான்.!
தினமும் காலையில் பூரியை விரும்பி சாப்பிடுவோர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயமாக மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.
இன்றுள்ள காலத்தில் நாம் தினமும் காலை 6 மணிக்கு அல்லது அதற்கு முன்னதே எழுந்து வீட்டு வேலைகளை செய்துவிட்டு அன்றைய பணியை கவனிக்க செல்கிறோம். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் கிளப்புதலே பெரும் சிரமமாக அடைந்து விடுகிறது.
அவர்களை பள்ளிக்கு தயார்படுத்தி காலை உணவாக அவசர கதியில் எளிமையான செயல்முறை உள்ள உணவுகளை கொடுப்போம். இன்றளவில் காலை நேரத்தில் பூரி மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை வழங்கப்படுகின்றன.
அவசர கதியில் விரைவாக பூரியை தயார் செய்து வழங்குகிறோம். இன்னும் சிலர் கடைகளில் தயாரிக்கப்படும் பூரிகளை சாப்பிட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள். பூரி போன்ற எண்ணெய் குணாவை காலையில் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளை காலையில் சாப்பிடுவதால் நாள் முழுவதிலும் உடல் மந்தத்துடன் காணப்படுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதனால் காலை நேரத்தில் எளிதில் செரிக்கும் உனவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அதேபோல, சாப்பிடுவதற்கு முன்பு இளம் சூடுள்ள நீரை குடிக்கலாம்.