"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கரிசலாங்கண்ணி என்னும் அற்புத மூலிகை: இதன் மகத்துவத்தை தெரிஞ்சுக்கோங்க!, அப்புறம் விடவே மாட்டீங்க..!
மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கரிசலாங்கண்ணி கீரை குறித்து நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்து கூறியுள்ளனர்.
கரிசலாங்கண்ணி கீரை வகையை சேர்ந்தது என்றாலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள மூலிகையாகவும் பயன்படுகிறது. திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க அடிகள்) தனது 6 ஆம் திருமுறையில் கரிசலங்கண்ணியை ஒரு சிறந்த காய கற்ப மூலிகையாக குறிப்பிட்டுள்ளார்.
100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் நீர்=85%, மாவுப்பொருள்=9.2%, புரதம்=4.4%, கொழுப்பு=0.8%, கால்சியம்=62 யூனிட், இரும்புத் தாது=8.9 யூனிட், பாஸ்பரஸ்=4.62% இத்தனையும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கரிசலாங்கண்ணி இலையை எடுத்து அரைத்து அதில் வரும் சாற்றை வெட்டுக்காயம் மற்றம் நாள்பட்ட ஆறாத புண்களின் மீது தொடர்ந்து தடவி வந்தால் காயங்கள் ஆறும். அதன் தழும்பும் நாளடைவில் மறைந்துவிடும். இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.
50 கிராம் கரிசலாங்கண்ணி இலையை அரைத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணெயை வடிகட்டி உபயோகப்படுத்தி வந்தால் தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
கரிசலாங்கண்ணி கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவில் எடுத்து, அவற்றை அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மில்லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும். மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
இந்த கரிசலாங்கண்ணிச் சாற்றை 100 மில்லி தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கி விடும். கரிசலாங்கண்ணி சாற்றை தினந்தோறும் 300 மில்லி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். மேலும், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இரத்தப்போக்கு குறையும்.