மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BabyTips: குழந்தைகளின் தலையை வடிவம் பெறவைக்க என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!
கடந்த தலைமுறையில் இருந்த பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்து குழந்தைகள் பிறந்தனர். அன்றைய நாட்களில் பெரும்பாலும் கூட்டுக்குடும்பம் என்ற நிலையில் பலரும் இருந்ததால் குழந்தையை கவனிப்பது, மருந்து கொடுப்பது என ஒவ்வொன்றையும் கவனித்து வந்தனர்.
தாயின் கருப்பையில் வளரும் குழந்தையுடைய மண்டை ஊடு & எலும்பு மென்மையான தன்மையுடன் இருக்கும். பிரசவத்தில் பிறப்புப்பாதை வழியே குழந்தை சிரமத்துடன் வருவதால் தலைப்பகுதி நீண்டு காணப்படும். குழந்தைகளை குளிக்க வைக்கையில் தாய்மார்களின் பாட்டிகளுக்கு பக்குவம் தெரியும் என்பதால் மென்மையுடன் தலை, கை, கால், மூக்கு போன்றவற்றை நீவி விடுவார்கள்.
இது குழந்தைகளின் உறுப்புக்கள் சரியான வடிவத்தை பெற உதவி செய்யும். குழந்தையை பாயில் உறங்க வைப்பது, விளையாட அனுமதிப்பது அவர்களின் தலையை நீளமான வடிவத்தில் இருந்து உருண்டையாக மாற்றும். தாயின் சேலையில் தூளிகாட்டி உறங்க வைப்பது, அரவணைப்பு உணர்வை கொடுப்பது மட்டுமல்லாது தலைப்பகுதியில் உருண்டை வடிவத்தை பெற்றுத்தரும்.
அதேபோல், குழந்தையை ஒரேநிலையில் படுக்க வைக்காமல், வெவ்வேறு நிலையில் உறங்க வைக்கலாம். தலையில் துணிகளை அடுக்கி தலையணை போல அமைக்கும் செயலை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாதங்கள் கழித்து தேங்காய் எண்ணெய் உடலில் தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வைக்கலாம்.
நடைபழகும் வயதில் கட்டை வண்டியை வைத்து நடைபழகுவது கால்களின் தசைக்கு வலிமையை கொடுக்கும். இயல்பாகவே நீண்டு இருக்கும் தலையை உருண்டையாக மாற்றுகிறோம் என தவறான முயற்சியிலும் ஈடுபட கூடாது. இயற்கையான எண்ணெய்களை கொண்டு குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் சருமத்தின் ஆரோக்கியம் என்பது மேம்படும். தசைகள் & எலும்புகள் வலுவாகும்.
தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் & ஆண்டி ஆக்சிடண்டுகள் சருமத்தின் வறட்சியை போக்கவைக்கும். தொற்றுகளில் இருந்து தள்ளிவைக்கும். சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் பொன்கின்றவை எலும்புகளின் வளர்ச்சி, நோயெதிர்ப்பு சக்திக்கு உகந்தது. பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் ஏற்படாமல் நம்மை காக்கும்.