ஷாக்கிங்... கெமிக்கல் ஸ்ப்ரேயில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்..!! அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள்.!!



riping-banana-using-chemicals-and-its-side-effects

வாழைப்பழம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதுபோன்று அனைவருக்கும் பலன் தரக்கூடிய வாழைப்பழத்தை  வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழுக்க வைப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

மக்கள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தை கெமிக்கல் ஸ்ப்ரே மூலம் பழுக்க வைப்பதால் மக்களின் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக உணவு கட்டுப்பாடு அதிகாரிகளும் அடிக்கடி கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடை ஒன்றில் நடத்திய சோதனையின் போது கடையின் உரிமையாளர் வாழைப்பழத்தை கெமிக்கல்ஸ் ஸ்ப்ரே பயன்படுத்தி பழுக்க செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

health tipsஇந்த சம்பவத்தில் கையும் களவுமாக பிடிபட்ட கடை உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி இது வாழைப்பழமா.? கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தி பழுக்க  வைக்கப்பட்டதா.? எத்தனை நாட்களாக கெமிக்கல் பயன்படுத்தி வாழைப்பழத்தை பழுக்க வைக்கிறீர்கள்.? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடை உரிமையாளர் திணறினார்.

health tipsஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தி வாழைப்பழத்தை பழுக்க வைப்பதால் வயிற்றுப்போக்கு நெஞ்சு எரிச்சல் வாந்தி உடல் பலகீனம், கண் எரிச்சல் விழுங்குவதில் சிரமம் மற்றும் தோல் அரிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.