#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே... 12 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 29 வயது நபர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது நபர் ஒருவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது. திருமணம் ஆன நாள் முதல் அந்த நபர் சிறுமி என்று கூட பாராமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் அந்த பகுதிக்கு பன்வேலை நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை மருத்துவ முகாமுக்காக சிறுமியின் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வந்த மருத்துவருக்கு சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் உடனே இது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அந்த 29 வயது நிரம்பிய இளைஞர் போக்கோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.