மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுமையின் உச்சம்... 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு... பைக்கில் அழைத்துச் சென்று நாசம் செய்த நபர்.!!
திரிபுரா மாநிலத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவி
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ப்ரசென்ஜித் முஹூரி என்ற நபர் சிறுமியை வீட்டிற்கு தனது பைக்கில் அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறார்.
றைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம்
ம இதனைத் தொடர்ந்து சிறுமியும் தனது பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த நபருடன் பைக்கில் சென்று இருக்கிறார். இந்நிலையில் ப்ரசென்ஜித் முஹூரி சிறுமியை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 10 வயது சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக கற்பழித்திருக்கிறார் ப்ரசென்ஜித் முஹூரி.
இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி... இளம் பெண் பாலியல் பலாத்காரம்... ஜிம் ஓனர் கைது.!!
காவல்துறை தேடுதல் வேட்டை
பாலியல் பலாத்காரம் செய்த பின்பு சிறுமியை அவரது வீட்டில் விட்டுச் சென்று இருக்கிறார் ப்ரசென்ஜித் முஹூரி. இந்நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் பலாத்காரம்.?... தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி... தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல்.!!