திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாணவி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர்.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீதம் முடிவு.!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாணவி குளிப்பதை ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் காலையில் நடைபயிற்சி சென்ற மாணவி திரும்பி வரவில்லை.
இது இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கிராமத்திற்கு அருகே உள்ள கால்வாயில் மாணவி சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாணவி கால்வாயில் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கத்து வீட்டை சேர்ந்த சிவம் என்பவரை விசாரணை நடத்தினர். அதில் வீட்டின் மேற்கூறையில் ரகசிய கேமரா வைத்து மாணவி குளிப்பதை சிவம் வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
இந்த விவகாரம் மாணவிக்கு தெரிய வர அவமானம் தாங்க முடியாமல் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக சிவத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.