மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈட்டி பாய்ந்து 15 வயது மாணவன் பரிதாப பலி... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது 15 வயது மாணவன் ஈட்டி பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புரார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் குஜேபா தாவ்ரே என்ற 15 வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடப்பதை முன்னிட்டு பள்ளி மைதானத்தில் ஈட்டி வீசும் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
.அப்போது மாணவன் குஜேபா தாவ்ரேவும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவனது ஷூ லேசை கட்டுவதற்காக மாணவன் கீழே குனிந்து இருக்கிறான். அந்த நேரத்தில் மற்றொரு மாணவன் எரிந்த ஈட்டி ஒன்று தவறுதலாக குஜாபாவின் தலையில் இறங்கியது .
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயம் அடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் இதில் ஏதேனும் அலட்சியம் இருக்கிறதா என்பது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.