ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அடக்கொடுமையே.. இப்படி நடக்கும்னு நினைச்சுருக்க மாட்டாங்களே.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த துயரம்!!

உத்தர பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டம் அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ- அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளனர். அவர்கள் பயணித்த பேருந்தில் பழுது ஏற்பட்டதால், பேருந்து சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டது.
நள்ளிரவு என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில் அதாவது சாலையில், தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். இதனையடுத்து 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம், அசூர வேகத்தில் வந்த லாரி ஒன்று மோதியுள்ளது. அங்கு ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள்18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 19 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.