மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மயங்கி விழுந்த 19 வயது கல்லூரி மாணவி.. திடீரென ஏற்பட்ட மரணத்தால் பரபரப்பு.!
சமீப காலமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நடனமாடும் போது, நடந்து செல்லும் போது என இளம் வயது மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுக்கா பகுதியில் வசித்து வருபவர் 19 வயது கல்லூரி மாணவி சுமா. இவர் மங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இதில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மாணவி கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதில் மாணவிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மாணவி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பெற்றோர் தனது மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 6 பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.