மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உல்லாச சுற்றுலாவுக்கு வந்த கேரள பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி 40 பேர் படுகாயம்..!!
கேரளாவில் இருந்து சுற்றுலாவுக்காக தஞ்சை வந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஒரத்தநாடு அருகேயுள்ள கீழையூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த ஒரத்த நாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.