மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது இடத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமை! வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!!
கடந்த சில காலமாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களை இழிவு படுத்துவதும், கொடூரமாக தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹ்லோலி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்களை, ஆண்கள் இழுத்து வந்து சாலையில் போட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
பெண்களை கடுமையாக தாக்கும் போது அதனை தடுக்காமல், பொதுமக்கள் வேடிக்கை பார்த்தது மிகவும் வேதனை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.