முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம்! கேரள அரசு அதிரடி!



2 years jail for not wearing mask

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், முகக்கவசம் கட்டாயம், எச்சில் துப்பக் கூடாது என்ற விதிமுறைகளை கேரள அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

பொது இடம், பணியிடம், வாகனங்களில் செல்வோர் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.  பொது இடங்களில், நிகழ்வுகளில் கண்டிப்பாக எப்போதும் 6 அடி தொலைவுக்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

mask

வேலை நிறுத்தம், தர்ணா, பேரணி, போராட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்று 10 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். பொது இடங்களில், சாலைகளில், நடைபாதைகளில் எச்சில் துப்பக்கூடாது.

 இவற்றில் எதை மீறினாலும், அந்த நபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிவதை, தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை கடுமையாக ஆக்கி, தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவித்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.