மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது குழந்தைடா... 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... காவல்துறை விசாரணையில் ஒருவர் கைது.!
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள இச்சாபுர் என்ற பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் நான்கு வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றிருக்கிறார்.
சிறுமியை கடத்தி சென்று அங்கிருந்த புதர் ஒன்றில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி அங்கேயே அழுது கொண்டு இருந்துள்ளார். பெற்றோர் எழுந்து பார்த்த போது திரும்பி தங்கள் அருகில் இல்லாததால் அவரை தேடி இருக்கின்றனர். அப்போது அங்கிருந்த புதர் ஒன்றில் சிறுமி காயங்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்திருக்கிறது. மேலும் சிறுமி நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அஜய் ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.