காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தெரு நாய் கடியால் 47 பேர் மரணம்.. கேரளாவின் அதிர்ச்சி விவரங்கள்.!
கேரள மாநிலத்தில் கடந்த 2020ல் இருந்து 2024 வரை 47 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இறந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நாய் கடித்தால் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டவை. சுகாதாரத்துறை அளித்த கூற்றின்படி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 10 பேரும், திருவனந்தபுரம் பகுதியில் 9 பேரும், கண்ணூர் பகுதியில் 5 பேரும், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 நபர்களும் உயிரிழந்ததாக தெரிய வருகிறது.
தொடர்ந்து எர்ணாகுளம் பகுதியில் 3 உயிரிழப்புகள் பதிவாகி இருக்கின்றன. பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த மாத இறுதியில், நாய் கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோல களமசேரி பகுதியில் 12 பேர் தெருநாய்கடியால் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் தெரு நாய் ஒன்று இறந்த நிலையில் அந்த நோயை பரிசோதித்ததில் அது ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட ரேபிஸ் நோய் தாக்கத்தால் இறப்புகள் ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.