மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த கணவன்; வீடியோ எடுத்து லீக் செய்த மனைவி.. கர்ப்பிணி பெண்ணுக்கு இப்படியொரு கொடுமையா?.!
கர்ப்பிணி என்றும் பாராது கணவன் பெண்ணை பலாத்காரம் செய்ய, அதனை மனைவி வீடியோ எடுத்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள நபரங்பூர் மாவட்டம், ஜெகந்நாத்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் லலியா றுஞ்சிகர் (வயது 38). இவரின் மனைவி பத்மா (வயது 35). இவர் சுகாதாரத்துறை ஆஷா ஊழியர். தம்பதிகளின் பக்கத்து வீட்டில், பத்மாவுக்கு சகோதரி முறையுள்ள பெண்மணி வசிக்கிறார். அவர் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு செல்லலாம் என அழைத்து சென்ற பத்மா, தனது கணவருடன் சேர்ந்து அவரை ஆட்கள் இல்லாத வேறொரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பத்மாவின் கணவர் லலியா கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராது நடந்த கொடுமையை பத்மா வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். இந்த விஷயத்தை வேறு யாரிடமும் கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நொறுங்கிப்போன பெண்மணி செய்வதறியாது இருக்கும்போதே, வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதனை தடுத்த உறவினர்கள் விசாரித்தபோது உண்மை அம்பலமானது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் பத்மா மற்றும் லலியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.