சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ரூ.5500 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரி குறைப்பு! எந்தெந்த பொருட்களின் விலை குறையும்
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28%இல் இருந்து 18% ஆகவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12%இல் இருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பின் மூலம் அடுத்த நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு 5,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரி குறைவானது வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது அறிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள், மேலும் சில ஆடம்பர பொருட்கள் என 22 பொருட்கள் மட்டுமே தற்போது 28 சதவிகித ஜிஎஸ்டி வரம்பில் உள்ளன. 2017 ஜூலை ஒன்றாம் தேதி முதல் முதலாக ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பொழுது 226 பொருட்கள் 28 சதவீதத்தில் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்கள்:
1 . IIM பயிற்சி வகுப்புகள், சேமிப்பு மற்றும் ஜன் தன் வங்கி கணக்குகளுக்கான சேவைகளுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது.
2 . லித்தியம் வகை பேட்டரி கொண்ட பவர் பேங்க், கணினி மானிட்டர்கள், 32 inch டிவி திரைகள், கியர்பாக்ஸ், டயர், VCR, வீடியோ கேம்கள் மற்றும் இதர விளையாட்டு பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியானது 28 சதவிகிதத்தில் இருந்து 18% ஆகா குறைக்கப்பட்டுள்ளது.
3 . 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட்டுகளுக்கு இதுவரை 18 சதவிகிதம் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வாரியானது இப்பொழுது 12% ஆகா குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18% ஆகா குறைக்கப்பட்டுள்ளது.
4 . சிறப்பு விமானத்தின் மூலம் ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கு எகனாமிக் கிளாஸிற்கு 5% ஆகாவும் பிஸ்னஸ் கிளாஸுக்கு 12% ஆகாவும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை பற்றி ஆய்வு செய்ய 7 அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.