தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
64% ஜிஎஸ்டி வரியை ஏழை நடுத்தர மக்கள் செலுத்துகின்றனர்... ஆய்வறிக்கை தகவல்..!!
ஜிஎஸ்டி யின் மூன்றில் இரண்டு பங்கு வரியை ஏழை மக்கள் செலுத்துவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் இந்த நிதியாண்டில் புதிய உச்சமாக 18 லட்சம் கோடியை எட்டும் என ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்த ஜிஎஸ்டி வசூலில் பணக்காரர்கள் 3 முதல் 4 சதவீதத்தை மட்டுமே செலுத்துவதாகவும் மீதமுள்ள 40 சதவீத வரித் தொகையை நடுத்தர குடும்பங்கள் செலுத்துவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 64 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் ஏழைகளிடம் இருந்து பெறப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் தாங்களுடைய வருவாயில், ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 4 ரூபாயை மட்டுமே ஜிஎஸ்டியாக செலுத்துகின்றனர் எனவும், அதே நேரத்தில், ஏழைகள் தங்களின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் வருவாயிலும் 67 ரூபாயை வரியாக செலுத்துவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்த தரவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி என்பதை கப்பர் சிங் வரி என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.