மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு, 70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி.! நெகிழ்ச்சி சம்பவம்!!
ராஜஸ்தானை சேர்ந்த 70 வயது மூதாட்டி திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகக் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் வியப்புடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கோபிசந்த். 75 வயது நிறைந்த அவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவரது மனைவி சந்திரதேவி. அவருக்கு 70 வயதாகிறது.
இருவருக்கும் திருமணமாகி 54 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தங்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். மேலும் கோபிசந்த் தங்களது குடும்பத்தில் ஒரே ஆண் மகன் என்பதால் அடுத்த வாரிசுக்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் ஆல்பாவில் உள்ள கருத்தரிப்பு மருத்துவமனை ஒன்றிற்கு சென்று தங்களது விருப்பத்தை கூறியுள்ளனர்.
அங்கு அவருக்கு ஐவிஎஃப் சிகிச்சை முறையில் கருத்தரிக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின் மூன்றாவது ஐவிஎஃப் சோதனையில் அவர் கருத்தரித்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தற்போது தாயும் சேயும் மிகவும் நலமாக உள்ளனர்.