மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே கவனம்.. 3 வயது குழந்தையை தரதரவென இழுத்து கடித்து குதறிய 8 தெருநாய்கள்..!! பதறவைக்கும் வீடியோ உள்ளே..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் வதோடா அன்மோல் நகரில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 8 தெரு நாய்கள் அவரை தரதரவென இழுத்து சென்று கடித்துக்குதறி உள்ளது.
இதனை கண்ட தாய் பதறியடித்து ஓடிவந்து நாய்களை கல்லால் தாக்கி விரட்டியுள்ளார். பின் பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.
Nagpur dog attack video : नागपूरात तीन वर्षांच्या मुलावर मोकाट कुत्र्यांचा हल्ला, नागपुरातील वाठोडा अनमोल नगर परिसरातील धक्कादायक घटना pic.twitter.com/dDU0iQqw4H
— PravinW🇮🇳 (@pravinwakchoure) April 13, 2023
மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர் குழந்தைகள் தங்களது வீட்டு வாசலில் தான் இருக்கின்றனவா? என்பதை அவ்வப்போது கண்காணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.