ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குஜராத்தில் பகீர்... பிச்சைக்காரனால் 13 வயது சிறுமி கற்பழித்துக் கொலை... காவல்துறை துரித நடவடிக்கை.!
குஜராத் மாநிலத்தில் 13 வயது சிறுமியை கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 வயது யாசகம் எடுக்கும் நபரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஜூன் 27 ஆம் தேதி அன்று மாயமானார். இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ராஜ் காட்டில் அமைந்துள்ள இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் 21 வயதுடைய யாசகம் பெற்று வாழும் ஜெய்தீப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் காவல்துறையின் விசாரணையில் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜெய்தீப்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இதற்கு முன்பும் சிறு சிறு திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பிச்சை எடுக்கும் நபரால் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.