#Accident: மலைப்பாங்கான சாலையில் பயணம்.. பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 12 பேர் துள்ளத்துடிக்க பலி., 25 பேர் படுகாயம்..!
ஒருநாள் இன்ப சுற்றுலா பயணம் எதிர்பாராத சோகத்தில் முடிந்ததில் 12 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, கோரேகன் பகுதியை சேர்ந்தவர்கள் 45 பேர், தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் பல இடங்களுக்கு சென்றுவிட்டு பழைய மும்பை - புனே சாலையில் புனேவுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் பயணம் செய்த பேருந்து ராய்காட் மாவட்டம் கோப்பொலி பகுதியில் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 12 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அலறி உயிருக்காக போராடினர். தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், கயிறுகட்டி அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#UPDATE | #Maharashtra: 12 people died & more than 25 injured after a bus fell into a ditch in #Raigad's Khopoli area. Rescue operations underway: Raigad SP#pune #Mumbai #mumbaipune #bus #BusAccident #Accidente #india #mumbaipunehighway pic.twitter.com/GOhkrBraVo
— Siraj Noorani (@sirajnoorani) April 15, 2023