மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலை தருவதாக அழைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த துணிக்கடை முதலாளி... கைது செய்த போலீசார்...!
துணிக் கடையில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து வைத்து மிரட்டிய, துணிக்கடை முதலாளி கைது.
சுராஜ் திவாரி என்பவர் லக்னோவில் துணிக்கடை நடத்தி வருகிறார். 23 வயதான இந்த இளைஞருக்கு கடந்த 2021 ஆம் வருடம் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த பெண் வேலை தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். உடனே தனது துணிக்கடையில் வேலை போட்டு தருவதாக சொல்லி அந்த பெண்ணை அழைத்துள்ளார் சுராஜ் திவாரி.
அந்த பெண்ணும் சுராஜ் திவாரியின் டன்துணிக்கடையில் வேலைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் இரவில் வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார் சுராஜ் திவாரி. அந்த பெண் மறுக்கவே அ ந்த பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதை ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்து. அதை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் வேலைக்கு வருவதை நிறுத்தியுள்ளார். எனவே சுராஜ் திவாரி அந்த பெண்ணின் வீடு தேடி சென்று அந்த வீடியோவையும் போட்டோவையும் காட்டி தொந்தரவு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் சுராஜ் திவாரி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.